இதயம்....!

இதயம்
எதற்கடி உனக்கு இரு இதயம்
கொடுத்துவிடு என்னுடையதை......!

வெற்றி
நி என்னை வெறுத்து சென்றது - எனக்கு
கிடைத்த தோல்வியல்ல - எனது
ஒரு தலை காதலின் வெற்றி.....!

இருக்கையில்

சாலையோர மரங்களின் பூக்கள்
உதிர்ந்து விழும் சாலையில்.....
'சில்'லென்று தென்றல் காற்று
வீசும் மாலை வேளையில்.....
ஏதோ ஓர் இனம்புரியாத வேதனை
இருவர் அமரும் இருக்கையில்
நான் மட்டும் இருக்கையில்.......!

நிறுத்திவைக்கிறேன்
எனது இதயத்துடிப்பையும்
ஒரு நிமிடம் நிறுத்திவைக்கிறேன் - பெண்ணே!
எப்படி நுழைந்தாயோ
அப்படியே வெளியேறிவிடு.....!

கரைந்தவன்
சிந்துவது கண்ணிர் துளியல்ல
காதல் துளி...!
கண்ணீர் சிந்தி காதலை கரைக்க பார்க்கிறேன்
காதல் கரையவில்லை
கரைந்தவன் நான்தான்...!

ஹலோ
மெல்லிய மாலைநேரம்,
சிவந்த சூரியன்,உறங்கும் நேரம்,
நான் கேட்டேன் ஓர் இனிய இசையை
தொலைப்பேசி முனையில் "ஹலோ.." என்ற
அவள் வார்த்தைகளை மட்டும்.....!

Comments