கொடுத்து விடு...!

கொடுத்து விடு......!
இறந்தப்பின்னே உறுப்புகளை
தானம் செய்ய விரும்புகிறேன் 
பெண்ணே....! - அன்றாவது
எனது இதயத்தை திரும்பக் கொடுத்துவிடு....!

மௌனம்
நீண்ட நேர மௌனம்
நிச்சயமாக சம்மதத்தின் அறிகுறியல்ல
விளங்கிக் கொண்டு விலகுகிறேன்.........!

தனிமை
உலகையே சிறியதாக்கி
உள்ளங்கைக்குள் 'mouse'- ஆய் வைத்திருந்தாலும்
உணர்கின்ற தனிமையை
என்னவென்று சொல்வது....?

கவிதை எழுத சொல்கிறது.....!
என்னதான் செய்வேனோ...?
உன்மிது கொண்ட காதல்
என்னை 'C'யிலும், 'C++'யிலும் கூட
கவிதை எழுத சொல்கிறது...........!

நன்றி: http://tamil.changathi.com/

Comments