எழுதுகோல்...!

இதுவரை என்னுடைய கவிதைகளை மட்டுமே இந்த வலைத்தளதில் வெளியிட்டு வந்து இருக்கிறேன்...!

இன்று நான் என்னுடைய வேறு ஒரு படைப்பைப் பற்றி எழுதியுள்ளேன், வேறு படைப்பு என்றதும் கதையோ,கட்டுரையோ என நினைத்துக் கொள்ளவேண்டாம்...!

ஆனால், இந்த படைப்பு தமிழைப் பற்றிய ஒன்று எனவும் சொல்லலாம்..!

இன்று கைபேசி இல்லாமல் உலகமே இல்லை என்ற நிலையுள்ளது, அதுவும்  நுண்ணறிபேசிகள் வந்தப்பின் சொல்லவே தேவையில்லை...!

அதிலும் ஆன்ராய்டு யக்க அமைப்பு கொண்ட நுண்ணறிபேசிகள் தான் முதன்மையாக உள்ளது..!

பெரும்பாலுமான நுண்ணறிபேசிகளில் தமிழ் எழுத்துகள் பார்க்க வசதியிருந்தும், எழுதும் வசதியிருப்பதில்லை, அதனை மனதில் கொண்டு நான் "எழுதுகோல்" எனும் நுண்ணறிபேசி பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கியுள்ளேன்...!

என்னுடைய இந்த படைப்பினை இரு பதிப்புகளாக வெளியிட்டுள்ளேன்...!

1. தமிழ் எழுத்துவகை துணைப்புரியும் கைப்பேசிகளுக்காக (For phones support Tamil font)
2. தமிழ் எழுத்துவகை துணைப்புரியாத கைப்பேசிகளுக்காக (For phones doesn't support Tamil font)

நிச்சயம் இந்த படைப்பு அனைவருக்கும் பயன்படும் என நம்புகிறேன்...!

தற்பொழுது மேலும் சில பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கிகொண்டு இருப்பதால் கவிதைகளை பதிவு செய்யவதை தற்சமயம் நிறுத்தியுள்ளேன்...!

மேலும் என்னுடைய இந்த படைப்பைப் பற்றிய தகவல்கள் அறிய:

http://droidmill.com/ezhuthukol-free-1389764.html
http://www.appannie.com/app/android/com.mathi.ezhuthukolfree/
http://www.appsurfer.com/categories/15-education/apps/35074-ezhuthukol-free
http://www.amazon.com/Mathiazhagan-ezhuthukOl-Free/dp/B00EAENO9Q

எழுதுகோல்-ஐ உருவாக்கவும்,வெளியடவும்,பிரபலப்படுத்தவும் எனக்கு உதவியவர்கள்:

எழில், சுரேஷ் (என்னுடைய தம்பிகள்),
இராஜ்குமார் (Y Can't U Educational Social Service),
நவின்கிருஷ்ணன் (Kollywood Dialogues - Admin),
மோகன் பிரசாத்,
ஜெயகிருஷ்ணன்,
கலைவேந்தன்,
இர்சாத் அலி,
மகாலட்சுமி,
கிருத்திகா,
பானுப்ரியா,
சிவரஞ்சினி,
லக்ஷனா,
தீப்தி
மேலும் பல நண்பர்கள்...! (எனக்கு ஞாபகமறதி அதிகம், நிச்சயம் சில நண்பர்கள் பெயர்களை குறிப்பிட மறந்திருப்பேன்...!)

இவர்களுக்கு நன்றி சொல்லி இவர்களை மூன்றாம் ஆளாக்க எனக்கு விருப்பமில்லை, மேலும் இவர்களின் ஊக்கமும், ஆதரவும் என்னை வெற்றியாளனாய், சாதனையாளனாய் உருவாக்கும் என்ற என் நம்பிக்கைக்கும் இதுவே அடையாளம்...!

(நீங்க எல்லாம் என்னோட "நண்பேன்டா"...!)

Tags: Ezhuthukol, Menporul, Tamil, Thamizh, English, Convert, Android, App, Conversion

Comments