காதல் – வெங்காயம் - கண்ணீர்...!
காதல் – வெங்காயம்
- கண்ணீர்
வெங்காயம் நறுக்கும்
நேரம்,
அவள் கண்ணில் கண்ணீர்,
என் காதலை நறுக்கும்
நேரம் கூட வரவில்லை...!
சிறிது நேரம் கழித்தே
புரிந்தது பெண்ணே,
கண்ணீரின் காரணம்
காதல் மட்டும் தான் என்று...!
ஒருதலை காதல்
நீண்ட நாள் ஒற்றைத்
தலைவலி,
ஒரு நாள் கொள்ளும்,
நீண்ட நாள் ஒருதலை
காதல்,
ஒவ்வொரு நாளும் கொல்லும்..!
கவிதை-1
முதன்முறை எழுதிய
கவிதை
என்னவென்று ஞாபகமில்லை,
யாருக்காக எழுதியது
என்பது மட்டும்
என்றுமே மறப்பதில்லை...!
கவிதை-2
சத்தமில்லாத கவிதை
அவளது புன்முறுவல்...!
Comments
Post a Comment