காதல்
காதல்
வேரோடு
மண்ணும்,
மண்ணோடு
வேரும் - காதல்,
இந்த காதலையும் பிரித்திட வேண்டாம்!
மதி
தேய்கிறான் தினம்
தினம்,
வளர்பிறை ஆவானோ
மதி!
சிரிப்பு
சத்தமிட்டு சிரிக்க
வேண்டும்,
புண்படுத்திய நெஞ்சங்களுக்கு
புரியும்வரை!
உதடு
உதட்டுச்சாயம்
பூசாத உதடு,
உன் நாவினால் நீ
ஈரம் பூச...
அய்யோ!
வார்த்தைகள் தடுமாறுது
நெஞ்சிக்குள்ளேயும்!
வாசம்
நினைக்கும்பொழுதே
உன் வாசத்தை அனுப்பி வைக்கிறாய்,
உன்னை மட்டும்
உன்னோடே வைத்து கொள்கிறாய்.
Comments
Post a Comment