கவிதை எழுதினேன்!

கவிதை எழுதினேன்,
எழுத்து பிழையோடு,
பிழை திருத்த விருப்பமில்லை,
பிழை - எழுத்தில் மட்டுமே இல்லை,
பிழையும், தோல்வியும் மட்டுமே தோழர்கள் எனக்கு,
என்றும் என்னை நீங்காத தோழர்கள்,
உண்மை நட்பின் இலக்கணங்கள்.

கவிதை எழுதினேன்,
ஆயிரம் கவிதை,
ஆயிரம் எண்ணங்கள் மனதில் உண்டு,
எழுத்துகளில் இல்லை,
என் கவிதைகளிலும் இல்லை,
சொல்லாமலே சொல்லிக்கொண்டிருக்கிறேன் - என் துக்கங்களை,
எனக்குள் நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கவிதை எழுதினேன்,
எதுகை இல்லாமல்,
மோனை இல்லாமல்,
நானே இல்லையாம் - எதுகைக்கு எங்கே போவேன்?
எங்கே என்னை நான் தொலைத்தேனோ?
தேடி பிடிக்க அடையாளங்களை தேடுகிறேன்.
தொலைந்தவனும் நானே, தேடுப்பவனும் நானே - வேடிக்கை!

Comments