இதய கண்ணாடி

கையாள தெரியாத குழந்தையாய்
தவற விட்டேனே உன் இதய கண்ணாடியை...
மீண்டும் என்னையே பிரதிப்பலிக்கிறாய்...
மீண்டும் அதை ஏந்தியே
கைகள் காயம் ஆக்கிக்கொள்கிறேன்...
இன்னமும் சிவப்பாய் என் பிம்பம்...
இறுதியாய் கசியும் காதலையும் பார்த்துவிட்டு விடைப்பெறுகிறோம்...
சிதைத்தவன் நானே...
சிதறிப்போவேன் என அறியவில்லை...
ஒரு துகள் கூட மிச்சமில்லாமல் எடுத்து செல்கிறாய்...
புதுகரம் ஒன்று அதை சேர்க்கலாம் ஒன்றாய்...
அன்றும் என்னையே பிரதிப்பலிகாதே...

Comments