நான் கவிதை எழுதவேண்டும்..!
என் கவிதை, உன் காதல்
முழுமை பெறாத என் கவிதை
படித்து முடித்து புரியவில்லை என்கிறாய்...
எனக்கும் தான்...
உன் காதல்...
உவமை
நீயும் நானுமே உவமையாகி போகிறோம்
என் கவிதைகளில்...
வேறு உவமை தான் எதற்கு?
நிலவாகிறேன் நான்...
எனை மறைத்து மறைத்து கடந்து போவது நீதானே...
பத்திரமாய்
நான் உனக்கு கொடுத்ததும்
நீ எனக்கு கொடுத்ததும்
பத்திரமாய் என்னுடனே
காதல், வெறுப்பு!
நான் கவிதை எழுதவேண்டும்
மீண்டும் வா...
என் காதலை மறு...
காயப்படுத்து...
நானும் காயப்படுத்துகிறேன்...
நான் கவிதை எழுதவேண்டும்...
Comments
Post a Comment