பாம்பு விஷம்
யாரை தேடுகிறேன்?
முடிவற்ற கனவுகளில் தொலைந்துபோகவே
தொலையும் இடம் தேடுகிறேன்.
விடைகள் தேடியே
வினாக்கள் தொலைந்தது.
உன்னை மட்டுமே நிரப்பிய இதயமதில்
போதை நிரப்ப நிரப்ப, வெற்றிடமே.
யாரும் செல்லா பாதையதில்
யாரை தேடுகிறேன்? இன்னொரு என்னையோ?
பாம்பு விஷம்
தாய் பாலின் போதையாய் காதல்,
இரத்தம் எங்கும் ஊறி இருக்க...
அவள் என்ன செய்ய முடியும்,
அவள் வெறும் பாம்பு விஷம்...
கவிதை -1
அன்று நீ கவிதை எழுத சொல்வாய்,
நான் வரிகளற்று நிற்பேன்...
சிரிப்பாய்,
மௌனமே கவிதை என்பாய்...
கவிதை -2
மடிக்கணினி திறந்து,
மட மடவென கவிதை தீட்டி பழக்கமில்லை
ஏதோ ஒரு தருணத்தில்,
தூரத்தில்,
நான் இதுவரை பார்த்திராத
எனை கவரும் பெண்ணின் புன்னகை
உன் சாயலை காட்டும் பொழுது,
திணறுகிறது என் வார்த்தை கவிதையாய்...
Comments
Post a Comment