என்றோ பறந்த நட்சத்திரம்
என்றோ பறந்த நட்சத்திரம்
எனக்கு இன்று என்ன வரம் தரும்?
காலத்தின் வேகத்தில்
கரையும் துகள் நான் என்று அது சொல்ல
கிருக்கல்கள் கொஞ்சம்
தந்துவிட்டு போக சொல்கிறேன்.
மௌனம் காத்த நட்சத்திரம்
நேற்று ரசித்த வெள்ளை மலர் கொண்ட மரத்தை நினைவூட்டியது
காலத்தில் கரைவது மலர்களும் தான் என்று
நானும் மரத்திடம் கிறுக்கல்கள் கேட்டு சென்றேன்
குச்சி கிளைகளுடன் மரம் என்னை
புன்னகையோடு பார்த்தது.
மலர்கள் எங்கே என நான் கேட்கவில்லை
நாளையே பூத்துவிடும் என தெரியும்
என்னுள் இன்று கிறுக்கல்கள் பூதத்தை போல.
மௌனம் காத்த மரமும், நட்சத்திரமும்
காலத்தில் கரையும் துகள் நீயும் உன் கிருக்களும் கூட என்று சொல்கிறதோ?
இருக்கலாம். இருக்கட்டும்.
காலத்தில் கரையும் துகளின் கிறுக்கல்கள் தொடரும்.
Comments
Post a Comment