என் சுழல்நிலை
தொலைந்த என்னை நானே தேடி
எங்கோ மீண்டும் தொலைய
என்ன இது? சுழல்நிலையோ?
ஈர்ப்புவிசை இல்லாத மயக்க நிலையோ?
கொடுங்கனவுகள் எனை விழுங்கபார்க்க
நான் அதையே உண்டு பிழைப்பேனோ?
கோர உருவம் நான் கொண்டு
மறிநிலை வெல்வேனோ?
என்னை நானே கேள்வி கேட்டு
விடையின்றி தவிப்பேனோ?
நான் கொண்ட விடைகளுக்கு
கேள்வி தாள் செய்வேனோ?
நிலையற்ற பல எண்ணங்களை
கிறுக்ககிடவே நினைப்பேனோ?
ஒருநிலை கொண்டு
என் சுழல்நிலை வெல்வேனோ?
Comments
Post a Comment