தேடல்
உன்னை தேடினேன்...
உன்னையே தேடிக்கொண்டிருக்கிறேன்...
இல்லை. இல்லை.
இப்பொழுதோ
உன்னை தேடுவதில்லை
என்னை நானே தேடுகிறேன்...
இல்லை.
யாரை தேடுகிறேன்?
என்னைக்கூட தேடுவதில்லை இப்பொழுது...
இல்லை.
நான் யாரையுமே தேடுவாதாய் இல்லை.
இல்லை.
ஏன்?
ஏன் தேடல்கள் முடிவதே இல்லை?
இல்லை...
என் தேடல் தொடங்கவே இல்லை.
சரி.
தேடுவோம் வா.
Comments
Post a Comment