கவிதை எதற்கு...?
கவிதை எதற்கு...?
உன் மீது நான்
கொண்ட காதலை
கவிதையில் எழுதுகிறேன்...!
கவிதை எதற்கு...?
இலக்கண விதியே
உள்ளது,
உடல் மீது உயிர்
வந்து ஒன்றுவது இயல்பே...!
பெயர்
உனது பெயரை பார்த்ததும்
மனம் துள்ளுவதும்
ஏனோ...?
உன்னையே பார்த்தது
போல
எண்ணுவதும் ஏனோ...?
உன் முகம்
நீ வசிக்கும் நகரில்
எங்கும் திரிகிறேன் - எதிர்ப்பாராமல்
உன் முகம் காண்பேன் என்ற எண்ணத்தில்,
இல்லை, இல்லை மடத்தனத்தில்...!
நெடுஞ்சாலை
நெடுஞ்சாலையில்
வேகத்தடை,
நட்பினில்
பூத்த காதாலோ...?
காதலோ...?
அருகில்
இருந்த நேரம் - நெடுந்தூரமாய்,
நெடுந்தூரம்
இருக்கும் நேரம் - அருகிலேயே இருப்பதுமாய்
தோன்றுவதும்
தான் காதலோ...?
Comments
Post a Comment