நான் கவிதை
நான் கவிதை
முழுமை
அடையாத கவிதை
வாக்கியமாவதும்
கூட இல்லை,
கவிதை வேண்டாம்,
நான் வாக்கியமாவது எப்போது?
தேடுகிறேன்
என்னை நான்
தேடுகிறேன்
என்னை நான்,
தொலைந்த
இடம் தெரியாமலே....!
அடையாளங்கள்
நினைவில் உண்டு,
ஆனால் போதுமானதா என தெரியவில்லை...!
என்ன என்ன அடையாளங்கள் தெரியும்?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்....!
கற்பனை
மட்டும் தான் இவன் உலகம்,
உலகம் மொத்தமும் கற்பனை...!
பொய்கள்
பேச தெரியாதவன்,
உண்மைகளை
மறைக்க தெரிந்தவன்,
கைப்பேசி
இவனது ஆறாம் விரல்,
கணிபொறி
இவனுக்கு ஆக்ஸிசன்,
எப்பொழும்
கிறுக்குவான்,
சில நேரம் கவிதை, சில
நேரம் நிரல்கள்,
கவிதை என்று சொல்லிக்கொள்வான்,
பிறரிடம் கவிதையை
சொல்லிக்கொல்வான்...!
வகுப்பறையில் அவளை
மட்டும் தான் பார்த்திருப்பான்,
கவிதைகள்
மட்டும் தான் கிறுக்குவான்.
'அறிவாளி'
நண்பர்கள் வைத்த பெயர்,
'கோமாளி'
உலகம் உணர்த்திய பெயர்!
புத்தகம்
கொஞ்சம் படித்தவன் தான்,
வாழ்க்கை
புத்தகம் தொலைத்தவன் தான்.
அடையாளங்கள்
போதும் தான் - தேடிவிடலாம்,
தொலைந்தவன்,
தொலைந்தவனாகவே இருக்கட்டுமே...!
Comments
Post a Comment