மேகம்...!
வெண்மேகங்கள்
உன்னைக் காண விரும்பும்
நேரங்களில்
அண்ணாந்து பார்க்கிறேன்
- வெண்மேகங்களை...!
மேகம்
மேகத்தை தொடர்ந்து
நானும் செல்கிறேன்,
நிழல் தரும் என்றும்,
மழை வரும் என்றும்
- நினைத்து...!
வெண்மேகம்
வெண்மேகமே,
புவி ஈர்ப்பு விசைக்கு
நீ மட்டும் விதிவிலக்கு...!
சோகம்
மேகத்தின் சோகம்
என்னவோ...?
கொட்டித் தீர்க்கிறது...!
காதல்- நட்பு
காதல் பெரிதா...?
நட்பு பெரிதா...?
தெரியவில்லை எனக்கு
- இருந்தும்
இரண்டும் உண்டு
உன்னோடு...!
Comments
Post a Comment