பகடை


பகடை
வாழ்க்கை எனும் ஏணி-பாம்பு விளையாட்டு, 
ஏணியே நிரந்தரமில்லை! 
பாம்பும் சில நேரம் பல் காட்டும்! 
நீயோ, ஆட்டத்தின் வெளியே, 
பகடையாய் உன்னையே உருட்டிட நேரிடும், 
வெற்றியோ, அது தோல்வியோ 
முடிவென்று ஒன்றுமில்லை! 
ஏற்றமும், இறக்கமுமே உண்மை! 
இதோ, இது உனது வாய்ப்பு, 
உருட்டி விடு, 
என்னத்தான் நடக்குமென பார்த்திடு!

Comments