யாரோ எழுதிய கவிதை!
திருவான்மியூர் பேருந்து நிலையம்,
அந்த ஒரு விநாடியில்,
யாருமே இல்லாமலும் போக,
நம் பார்வைகள் மோதிட,
கண் சிமிட்டிய நேரத்தில் காணமல் போகிறாய் அந்தக் கூட்டத்தில்.
தேடுவதை மறைந்திருந்து பார்த்தாயோ?
தெரியாது எனக்கு.
விதி என்னும் காற்றா?
இல்லை, காற்று என்னும் விதியா?
தெரியாது எனக்கு.
விலகி செல்வது மேகம் என மட்டும் தெரிகிறது.
யாரோவாகி சென்றுவிட்டாய்,
உன்னை யாரென்று தேட?
உன்னாலே, உன்னையே நினைத்து எழுதுகிறப்பொழுதும்,
யாருக்கோ, யாரோ எழுதும் கவிதையாகிப்போகிறது.

Comments
Post a Comment