வருத்தம்...!

கவிஞனின் வருத்தம்
அவளை எண்ணி எண்ணி
எழுதுகிறேன் கவிதைகள்
அவையனைத்தும் அவள் மட்டும்
படிக்கத் தவறுகிறாள்...!

மறைக்கிறாள்
கண்களினால் காதலைச் சொல்லிவிட்டு
உதடுகளில் மறைக்கிறாள்...!

காதல் கதை
வழக்கம் போல ஒரு காதல் கதை தான்,
பொறுமையாய் சொல்லிடுவாள் அவளது காதலை...!


நினைவுகள்
நானல்ல, எனது நினைவுகள் போதும்,
அவள் என் மீது காதல் கொள்ள...!


கவிதைகள்
ஏனடி இப்படி செய்தாய்...?
பேனா மை தீர்ந்தும்
தோன்றுகிறது கவிதைகள்...!


நன்றி: http://tamil.changathi.com/

Comments