கண்ணாமூச்சி..!

கண்ணாமூச்சி -1
பிடித்திருகிறது  - முகபுத்கத்தில் 
நானும்  அவளும் ஆடும் - கண்ணாமூச்சி ...!

கண்ணாமூச்சி -2
வகுப்பறையிலும்  கண்ணாமூச்சி ,
அவள் ஒரு கடைசியில் ,
நான் மறு கடைசியில் ...!

வலிகிறது காயங்கள் 
பலமுறை காயப்படுத்திவிட்டேன் - அவளை ,
வலி தெரியாதது  போல அவள் நடிக்கும்  - தருணமெல்லாம் ,
எனக்குள் வலிகிறது காயங்கள் ...!

இமைகள்
என்னை பிடிக்கும்
எனச் சொல்லி
புருவம் ஏற்றிச் சொன்ன கண்கள் , - இன்று
வெறுகிறேன் எனச் சொல்லி
இமைகளை மூடிக்கொள்கிறது
அது என்னை கொல்கிறது...!

Comments

Popular Posts