குறும்பு...!
காதலன் குறும்பு
என் கண்களுக்கு நீ ரதி தான் - பெண்ணே ...!
நீ மட்டும் தான் ரதி என நினைத்துக் கொள்ளாதே ...!
விளம்பரம்
விளம்பரம் செய்கிறேன்...!
காதல் தூது ஒருவர் - வேண்டுமென்று ...!
பரிசு
எழுத்துக்கள் எல்லாம் சேகரித்து,
சொற்கள் எல்லாம் சேகரித்து ,
அவையனைத்தையும்
அடுக்கடுக்காய்
அடுக்கி வைத்து
பரிசளிக்கிறேன் எனது கவிதைகளை ...!
அன்பு
நண்பன் ஒருவன் தங்கை என்றான் ,
ஒருவன் அண்ணி என்றான்,
ஒருவன் அக்கா என்றான் , - பெண்ணே ...!
உனக்காக காத்திருப்பது
நானும் என் காதலுமட்டுமல்ல ,
சொந்தங்களும் ,
சொந்தங்களின் அன்புகளும் ...!
Comments
Post a Comment