எப்போது...?

எப்போது..?
கண்களில் பேசிக்கொண்டோம் – அப்போது
கண்களில் மட்டுமே பேசிக்கொள்கிறோம் – இப்போது
மௌனம் எனும் மொழிப்பயின்றோம் – அப்போது
மௌனம் மட்டுமே மொழியானது – இப்போது
சிந்தனை பல இருந்தது – அப்போது
சிந்தனையெல்லாம் நீ ஆனது எப்போது..?


ஞாபகம்
சில்லென வீசிடும் தூரல்கள்,
நனைகிறேன் ஞாபகங்களில்...!

இலக்கணம்
பெண்ணுகுரிய இலக்கணம் அவள்தானோ...?
வல்லினம்,மெல்லினம்,இடையினம் என
பெயரில் கூட இலக்கணம் கொள்கிறாள்...!


மௌனம்
மனம் எனும் சிறை,
மௌனம் எனும் தண்டனை,
கைதியாய் நான்....!

Comments