தனிமை

தனிமை
தனிமையும் தனிமையாக்கி
விட்டுசென்ற துயரம் என்னுள்!

இரயில்
நின்று கொண்டே என்னை
கடந்து செல்கிறாள்,
இரயில் நிலையத்தில் அவள்,
இரயில் பெட்டியில் நான்...!

காதலை சிலுவையில்
என் காதலை சிலுவையில் ஏற்றினாள்,
மூன்றாம் நாள் உயிர்த்தெழும் என நினைத்தாளோ?
மறித்தால் தானே?

தனிமையின் இனிமை
இருளில் இருக்கிறேன்,
நிழலையும் இழந்து,
தனிமையை உணர்ந்து,
தனிமையின் இனிமை உணர்ந்து…!

கிழக்கும் மேற்க்கும்
அவள் அருகிலில்லாத நேரம்
சூரியன் கிழக்கே உதித்தது,
அருகிலிருந்த நேரம்
பூமி மேற்க்கை நோக்கி சுழன்றது....!

Comments