கனவுகள்
கனவுகள்
கனவுகளாய்
நம் காதல் நினைவுகள்,
கண்களை
மூடிக்கொண்டு அல்ல...!
பாதை
தெரிந்த பாதையில்
செல்லும் நேரம்,
உன் நினைவுகள்
மட்டும் தான்...!
தெரியாத பாதைகளில்
செல்லும் நேரம்,
பாதை உன்னிடம்
சேர்க்காதோ? - என்ற
ஏக்கம் மட்டும்
தான்...!
நிழற்படம்
உனது நிழற்படம்
மட்டுமே சொந்தமாகிறது,
நீ விழகிச் சென்றதிலிருந்து...!
இதயம்
ஏழு கடல் தாண்டி
வைத்திருப்பாளோ
அவள் இதயத்தை,
இடம் பிடிக்கவே
முடியவில்லை...!
காதல்
உலக பொதுமறையிலும்
காதல் உண்டு,
உன் மனதில் தான்
இல்லை!
Comments
Post a Comment