கவிதை
கவிதை
அவள் சொல்ல சொல்ல,
கவிதை எழுதினேன்.
'சொன்னது கவிதையே
இல்லை' என்கிறாள் கடைசியில்!
ஆசைதான்
'இலக்கணப்போலி
உன் இடை'
என்று சொல்ல ஆசைதான்!
தமிழச்சி
உயிரற்ற நடிப்பு,
மும்பை அழகியாம்,
குரல் மட்டுமல்ல,
உயிர்ப்பும் தருகிறாள்
ஒரு தமிழச்சி!
பேருந்து
பயணம்
எப்படியோ
பிடித்துவிட்டேன் ஜன்னல் ஓரம்,
கண் விழித்தால் மட்டுமே தெரியும்
பயணிப்பது
குதிரையில் இல்லை பேருந்தில் என்று,
குதிரைக்கூட
சீராகத்தான் குதிக்கும்,
நடத்துனருடன்
யாரோ ஒருவன் சண்டை,
காரணம்
சில்லறை,
விழக்கூடாத
வார்த்தை எல்லாம் என் காதுகளிலும்,
இருந்தும்
சுகமான பயணம்தான் அது!
வாழ்க இளையராஜா!
Comments
Post a Comment