கிறுக்கல்கள் தொடருமோ?

தேடும் பொழுதில் தெளிவாய் தொலைந்தும்,
உதறும் பொழுதில் விரல் பிடித்தே நகர்ந்தும்,
கண்களும் சிவந்து, சிதறிய துளிகள் மீண்டும் சிதற...
கலங்கிய பார்வைக்குள், பாவை நீ மட்டும் தெளிவாய்..
மாறிப்போன முகமதை அறியாது,
வயதை தொலைக்காத நீளும் ஒரு கற்பனையில்...
ஜாடையாய் பேசிக்கொண்டே...
என் நிழலை நீ வருட...
மீண்டும் கிறுக்கல்கள் தொடருமோ?

Comments