கண்ணாமூச்சி...!

கண்ணாமூச்சி
எனக்கும் பிடித்திருக்கிறது
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்,
நிலவு வரும்போது கதிரவன் மறைவதும்,
கதிரவன் வரும்போது நிலவு மறைவதும்...!

தண்டனைகள்
சிரித்து பழகிய குற்றங்கள் எல்லாம் அவளுடையது - ஏனோ
அதற்குரிய தண்டனைகள் மட்டும் என்னுடையது....!

புரியாதா உனக்கு...?
நான் உன்மீது கொண்ட காதலுக்கு
ஏனடி உன் இதயத்தையே வதைத்துக் கொள்கிறாய்...?
வலிப்பது என் இதயம் என புரியாதா உனக்கு...?

என் கவிதை
உணர்வுகளை கவிதையாக்கி அவளிடம் - சமர்ப்பித்தேன்,
"யார் அந்த பெண்...?" என கண் சிமிட்டி,
உதட்டில் புன்னகையோடு கேட்டால்,
அவள் தான் என அவளுக்கே தெரிந்தபின்பும்,
பிடித்திருக்கிறது அவளுக்கு என் கவிதை - ஆனால்
புரிந்துக் கொள்ளவில்லை அவள் என் மனதை...! 

நன்றி:http://www.vengayam.net/tamil/trans/

Comments