நட்பான காதல்...!

நட்பான காதல்
நிலவை நான் இரசிக்கும்போதெல்லாம்
நாம் கொண்ட நட்பு தெரிகிறது,
பெண்ணே - அந்த நிலவோடு வாழ ஆசைப்படுகிறேன்...!

Password
ஒருமுறை தான் பார்த்தாள்,
எனது "E-mail Password" மாறிப்போனது...!

பதில்
என்னைப் பார்த்ததும்,
புள்ளி இல்லாத இடங்களிலும்
கோலம் போடுகிறாள்
என்னவென்று கேட்டால்,
வெட்கத்தை பதிலாய் தருகிறாள்...!

நட்பும்,காதலும்
நட்பும்,காதலும் ஒன்றுதானோ...?
முழுமையாய் புரிந்துக்கொள்ள முடிவதுமில்லை
பிரிந்துச்செல்லவும் முடிவதில்லை...!

நன்றி:http://www.vengayam.net/tamil/trans/

Comments