பார்வைகள்...!

பார்வைகள்
எதிர்பாராமல் மோதிக்கொள்ளும் பார்வைகள்
காதலில் இன்பம்…!
(துன்பமும் கூட…!)

கரைக்கிறது
கண்களில் நீர் வழிந்திருந்தால்,
கவலைகள் கரைந்திருக்கும்,
மனதில் வழிகிறது – அது
என்னையே கரைக்கிறது…!

வெற்றிடம்
மனம் ஒரு வெற்றிடம்
காற்றாய் காதல் பாயும்
வெற்றிடத்தின் வெறுமையை
உணர்கிறேன் நான்…!

மௌனம்
கைபேசி இணைப்பில்
நாம் பேசும் மௌனம் – அது
மனம் பேசும் காதல்…!

Comments

Post a Comment