தாகம் தீரும் என நம்பி
ஏதும் கிறுக்காமல்
தொடுத்திரையும் நானும்
என்ன மௌனம் சாதிக்கிறோம்?
மீண்டு வர
மீண்டும் கிறுக்கவே
கிறுக்கனல்லவே இப்போது!
கிறுக்கனாய் மாறிட
நானும் அலைந்திட
தேவதை அவளும்
சிறகு விரித்திட
கானல் நீரில் பிம்பம் ரசிக்கிறேன்.
காகமாய் மாறி கற்கள் நிரப்பவா?
தாகம் தீரும் என நம்பி.
Comments
Post a Comment