தொடுதிரை தீண்டி தீண்டி

நிரல்களால் நிரம்பிப்போன இரத்தமதில்,
ஊறிபோகிறது போதை கோப்பைகள்.
நிழல் சுழல்நிலைகளில் நீந்தியும்,
நிஜ சுழல்நிலையில் சிக்கிக்கொள்கிறேன்.

கிறுக்கன் நான்,
புத்தனாவதாய் நினைத்தே,
பித்தனும் ஆகி,
பிதற்றல்களாகிறது கிறுக்கல்கள் எல்லாம்.

பிதற்றும் என்னை மௌனமாகிவிட
உன் நீள விரல்கள் தேடியே
என் விரல்ரேகைகள் கரைந்துபோகிறது,
தொடுதிரை தீண்டி தீண்டி.

Swipe right. Swipe right. Swipe right...

Comments