டார்க் மோட் ரசிகன்
"காதலுக்கு மாற்று எதுவுமில்லையே..." பாடிட யுவனும்
புரிந்ததைப்போலவே நானும்,
உளறிய, கிருக்கிய பழைய வார்த்தைகளை தேடி
கிழிந்து, கசங்கி, சிதறிய தாள்களிலிருந்து
பொறுக்கி, அடுக்கி மீண்டும் கிறுக்கனாகவே பார்க்கிறேன்.
தப்பாத அந்த எதுகை மோனைகள்
தப்பாமலே தப்பிக்கிறது.
தப்பில்லை தான்.
இரவு நேர பிரகாசம் கண்களை கூச,
இருட்டு தாளில் வெள்ளை நிறத்தில் கிறுக்குகிறேன்.
என்ன செய்வது? டார்க் மோட் ரசிகன் நான்.
Comments
Post a Comment